Canada

பிரம்டனில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் நீச்சல் தடாகத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட தாயும், மகனும்..

பிரம்டன் பகுதியில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழகிய நிலையில் மீட்கப்பட்ட பெண் ஒருவரும் அவரது மகனும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விமான நிலைய வீதி மற்றும் Countryside Drive பகுதியில், Hilson Courtஇல் அமைந்துள்ள வீடு ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிகக்ப்பட்டனர்.

கனடாவில் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கிய நிலையில் அவனை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டன் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் அக்ரோங், இவர் மனைவி எலிசபெத், தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான். இம்மானுவேல் குடும்பம் கடந்த 2011-ல் கானா நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் இம்மானுவேலின் மகன் தனது வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல்குளத்தில் நேற்று விழுந்து மூழ்க தொடங்கினான். சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் எலிசபெத் மகனை காப்பாற்ற முயன்றார். முடியாத காரணத்தால் உடனடியாக கணவருக்கு போன் செய்து, நம் மகன் தண்ணீரில் மூழ்கி மெதுவாக இறந்து கொண்டிருக்கிறான் என கதறியுள்ளார்.

இதையடுத்து பக்கத்தில் வேலையாக சென்றிருந்த இம்மானுவேல் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் அவரின் குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான அஞ்சும் அங்கு வந்து உதவ முயன்றார். அப்போது எலிசபெத்தும் சிறுவனோடு சேர்ந்து நீரில் மூழ்கினார்.

இருவரும் தடாகத்தில் மூழ்கிக் கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போது, அங்கே எந்தவித அசைவும் அற்ற நிலையில் அந்த இருவரும் காணப்பட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் கூறியுள்ளனர். இருவருமே உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்து விடடதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

மனைவி மற்றும் மகனின் இழப்பு இம்மானுவேலை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இம்மானுவேல் கூறுகையில், அன்பான மனைவியையும், மகனையும் இழந்தது வேதனையளிக்கிறது. சில வினாடிகளில் தண்ணீர் அவர்களை உயிரை பறித்துவிட்டது என்பதை நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பீல் பிராந்திய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top