பிரம்டனில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது மோதிய கார் !

பிரம்டனில் உள்ள வீடு ஒன்றின் மீது வாகனம் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்தானது நேற்று அதிகாலை வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் கிரெஸ்ட்விவ் சாலை அருகே இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வேகக்கட்டுப்பாட்டினை இழந்த வாகனம் முதலில் மரம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதை அடுத்து வீட்டில் மோதியுள்ளது.
இதில் வாகனத்தில் சென்ற 2 பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், 3 ஆவது நபர் சிறு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் இவ்விபத்துக்கு காரணமான, 3 ஆம் நபரான வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். அத்துடன் இச் சம்பவத்தில் வீடு சேதமடைந்துள்ளதுடன், வீட்டில் இருந்தவர்களை தீயணைப்பு குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். அத்துடன் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.