News

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜை கொலை செய்ய முயற்சித்த தீவிரவாதி! சிறைச்சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பயங்கரம்

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜை கொலை செய்ய முயற்சித்த தீவிரவாதி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிரித்தானியா இளவரசர் ஜார்ஜை கொலை செய்ய ஐ.எஸ். தீவிரவாதி ஒருவர் திட்டமிட்டது தெரியவந்ததையடுத்து பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட Husnain Rashid(32) Lancs நகரின் Nelson பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் இவர் கடந்த அக்டோபரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் உள்ள தனது ஆதரவாளர்களுடன் குழு சாட்டிங்கில் ஈடுபட்டுள்ளார் என்பதும் தெரியவந்தது.

அதில், இவர் இளவரசர் ஜார்ஜை கொல்வதற்கு அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து ஜார்ஜின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் இளவரசருடன் இரண்டு முகமூடி அணிந்த ஜிகாதி போராளிகள் இருப்பது போன்று வடிவமைத்து உள்ளார். தொடர்ந்து, அரச குடும்பம் கூட விட்டு வைக்கப்படாது, பள்ளி கூடம் விரைவில் தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு தயார் செய்வது மற்றும் தீவிரவாதத்தினை ஊக்குவிப்பது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் Husnain Rashid 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது இந்நிலையில் Manchester’s Strangeways சிறைச்சாலையின் A பிரிவில் அடைக்கப்பட்டிருந்த Husnain Rashid மீது கடந்த புதன் கிழமை காலை கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் Husnain Rashid மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், இளவரசர் ஜார்ஜை கொலை செய்ய முயற்சி செய்த தீவிரவாதி சிறைச்சாலையில் கொடூர முறையில் வெட்டப்பட்டு கிடந்துள்ளான். முகம் வெட்டப்பட்டு மற்றும் இடது காது பக்கம் பயங்கர வெட்டுக் காயத்துடன், இரத்த வெள்ளத்தில் அங்கு கிடந்துள்ளான். இந்த தாக்குதல் ஒரு டூத்பிரஷ் வைத்து நடந்துள்ளது. அதாவது டூத் பிரஷின் உள்ளே பிளேடை வைத்து நடந்துள்ளது எனவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top