பிரித்தானியாவின் வரலாற்று சிறப்புமிக்க வங்கி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

பிரித்தானியாவின் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடமான பிரைமார்க் ஸ்டோரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் Belfast பகுதியில் உள்ள 233 வருட பழமையான வங்கி கட்டிடத்தில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக கட்டிடம் முழுவதும் பரவியதை அடுத்து தீயணைப்பு வாகனத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து 11 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அப்பகுதியே பெரும் புகைமூட்டமாக காணப்படுகிறது. இதற்கிடையில் பொலிஸார் பொதுமக்கள் அனைவரையும் அப்பகுதியில் இருந்து வெளியேற்றி வருகின்றனர். இந்த வங்கி கட்டிடம் கடந்த 1785-ம் ஆண்டு புகப்பெற்ற ஆங்கிலேய சிற்பி robert taylor மூலம் வடிவமைக்கப்பட்டு, Waddell Cunningham என்பவரால் நிறுவப்பட்டது. அதன் பின்னர் 1787-ம் ஆண்டு ‘The Bank of the Four Johns’ என்னும் பெயரில் வங்கி திறக்கப்பட்டது.
இதனை ஆரம்பித்த 4 பேரின் பெயர்களும் ஜான் என்பதை குறிக்கும் விதமாகவே இந்த பெயர் வைக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டிடத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால் குடியிருப்பாக மாறியது. பின்னர் மீண்டும் 1805-ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டு கடையாக மாற்றப்பட்ட அதனை, Primark ஆடை நிறுவனம் சில்லறை வியாபாரத்திற்காக கடந்த 1979-ம் ஆண்டு வாங்கியது.