News

பிரித்தானியாவில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள மஹிந்த! பறி போகும் முக்கிய நபரின் பதவி

பிரித்தானியாவில் புதிய சட்ட திருத்தத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் முதலாவது உறுப்பினராக இயன் பெய்ஸ்லி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டு குடும்ப சுற்றுலாக்கள் தொடர்பில் உரிய காரணங்களை சமர்ப்பிக்க தவறினார் என்ற குற்றம் இயன் பெய்ஸ்லி மீது சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவரின் தொகுதியில் அவருக்கு எதிராக மனுக்களை கோரும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த மனுக்கள் விடயத்தில் அவரின் வடக்கு என்ரீம் தொகுதியின் வாக்காளர்களில் 10 வீதமானோர் தமது மனுக்களை சமர்ப்பித்தால் இயன் பெய்ஸ்லி தமது நாடாளுமன்ற உறுப்புரிமையை இழப்பார். இதனையடுத்து இடைத்தேர்தல் ஒன்று நடத்தப்படும்.

இந்நிலையில் இயன் பெய்ஸ்லி தமது உறுப்புரிமையை இழந்தால், அது பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தெரேசா மேயின் கட்சிக்கே இயன் பெய்ஸ்லி ஆதரவு வழங்கி வருகிறார் என்பதே இதற்கான காரணமாகும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே இயன் பெய்ஸ்லி, இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

To Top