பிறந்த இடத்திற்கு திரும்பும் ஐம்பிறப்புக்களில் எஞ்சியிருக்கும் இருவர்!

84வருடங்களிற்கு முன்னர் பிறந்த ஐம்பிறவிகளில் எஞ்சியிருக்கும் இருவர் இந்த வாரம் தாங்கள் பிறந்த மரக்கட்டைகளினால் அமைக்கப்பட்ட சிறு குடிலிற்கு திரும்புகின்றனர். இவர்களது பிறப்பை ஒரு தேசிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக செய்வதற்காக இடம்பெறும் நிகழ்வில் கலந்து கொள்ள இவர்கள் வருகை தந்துள்ளனர்.
சகோதரிகள் இருவருமான சிசிலி டியோனெ மற்றும் அனெட் டியோனெ பிறந்த இடமான நோர்த் பே. ஒன்ராறியோவிற்கு ஞாயிற்றுகிழமை வந்தனர். விழாவின் போது நினைவுசின்னம் ஒன்று வெளியிடப்படும். இவர்களது வீடு ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது
சகோதரிகள் இருவரும் 20-வருடங்களிற்கு பின்னர் முதல் தடவையாக தங்கள் பிறந்த வீட்டிற்கு வந்துள்ளனர். இருவரும் மிகுந்த ஆர்வமாக காணப்பட்டனர். 1934 மேமாதம் 28-ல் பிறந்த இவர்களது பிறப்பினால் இவர்கள் சர்வதேச உணர்வுகளிற்கு ஆளானார்கள். பிறந்த போது ஓரீற்று ஐம்பிறவிகள் என அறியப்பட்டனர்.
பின்னர் இருவரே உயிர் பிழைத்தனர். பிறந்த சமயம் மிக அழகாக இருந்தனர். ஊடக கவரேஜ் மூலம் பெருந்தொகையை ஏற்படுத்தியது. ஐவரையும் அவர்களது முதல் ஒன்பது வருடங்களையும் ஒன்ராறியோ அரசாங்கம் பெற்றோரிடமிருந்து பெற்று அவர்களை ஒரு சுற்றுலா ஈர்ப்பாக மாற்றியது.
இதனால் கிட்டத்தட்ட 500மில்லியன் டொலர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இவர்களது குடும்பத்தின் கதைக்கு அர்ப்பணமாக இவரகள் பிறந்த வீடு 1985-ல் ஒரு மியுசியமாக மாற்றப்பட்டது.