பிள்ளையை தந்துவிடு, இல்லையேல் என்னையும் கொன்று விடு ; ஆர்ப்பாட்டத்தில் கதறியழுத தாய்!

“காணாமலாக்கப்பட்ட பிள்ளையைத் தேடி தந்து விடு, இல்லையேல் என்னையும் கொன்று விடு” என்ற அவல கோஷத்துடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஒருவரின் தாய் கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பாக கதறியழுதுள்ளார்.
வலிந்து காணமலாக்கப்பபட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்த்தினை சம உரிமை இயக்கம் ஏற்பாடு செய்திருந்ததுடன் இதன்போது ஆர்பாட்டக்காரர்கள் ‘நீதியை நிலைநாட்டு, ‘வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் விபரங்களை வெளியிட வேண்டும்” போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவண்ணம் கண்ணீர் மல்க தமது கவலையையும் ஆதங்கத்தையும் வெளியிட்டிருந்தனர்.
மேலும் 30 வடருக்கால யுத்தத்தால் காணமாலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்னமும் வெளிப்படுத்தவில்லை, ‘பொய் வாக்குறதிகளை தந்து அரசாங்கம் எம்மை ஏற்மாற்றுகின்றது” ‘காணாமலாக்கப்பட்டோருக்கென கொண்டுவந்த ஆணைக்குழு பொய்யானது, அரசாங்கம் வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுகின்றது எனவும் கோஷம் எழுப்பினர்.
காலை 10.30 மணியளவில் கொழும்பு பிரதான புகையிரத நிலையத்தின் முன்றலில் ஆரம்பமாகிய இந்த போராட்டம் 1.30 மணியளவில் முடிவுக்கு வந்தது. 11.15 மணியளவில் பிரதான புகையிரத நிலையத்திலிருந்து ஜனாதிபதி செயளகத்தை நோக்கி லோடஸ் வீதியினூடாக புறப்பட்டச்சென்ற ஆர்பாட்டக்குழு லோடஸ் சந்தியில் வைத்து கலகமடக்கும் பொலிஸரினால் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் சம உரிமை இயக்கத்தின் இணைப்பாளர் ரவீந்ர முதலிகே தலைமையிலான குழு ஜனாதிபதி செயலகத்துக்கு தமது கோரிக்கைகள் அடங்கிய மாஜரை கையளிக்க சென்றமை குறிப்பிடத்தக்கது.