பீச்சிற்குள் மூழ்கிய தாய் மற்றும் மகனை காப்பாற்ற முயன்று உயிரிழந்த மாணவன் ஹொவட் முத்துலிங்கம்!

வெள்ளிக்கிழமை பிற்பகல் வூட்பைன் பீச்சிற்குள் மூழ்கி உதவி கோரி சத்தமிட்ட போது குதித்த மக்களில் 16வயதுடைய கைல் ஹொவட் முத்துலிங்கம் என்ற ஸ்காபுரோ வெக்ஸ்வோட் கல்லூரி கலை துறை மாணவனும் ஒருவன்.
இம்மாணவன் குறிப்பிட்ட கல்லூரியை சேர்ந்தவன் என ரொறொன்ரோ மாவட்ட கல்விச்சபை அடையாளம் காட்டியுள்ளது. அவசர சேவை பிரிவினர் ஐவரை சம்பவத்திலிருந்து காப்பாற்றினர். இவர்களில் ஹொவட் முத்துலிங்கம் என்ற மாணவனும் ஒருவன்.
இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிறிது நேரத்தில் ஹொவட்-முத்துலிங்கம் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. மாணவனிற்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாடசாலை இன்று திறந்திருக்கும் என கல்வி சபை தெரிவித்துள்ளது. அடுத்த மாதம் இம்மாணவன் 12ந்தரம் செல்ல இருந்தான்.