புகலிட செலவுகளிற்காக ரொறொன்ரோவிற்கு 11மில்லியன் டொலர்கள்!

ஒழுங்கற்ற எல்லை கடப்பினால் ஏற்பட்ட செலவுகளால் திண்டாடும் ரொறொன்ரோ நகரத்திற்கு மத்திய அரசாங்கம் 11மில்லியன் டொலர்கள் வழங்க முன்வந்துள்ளது. மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப் பட்ட குற்ற அமைச்சர் பில் பிளயர் தஞ்சம் புகுந்தோர்க்கு தற்காலிக வீடு வழங்குவதற்கான நிதி உதவி வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடரும் என தெரிவித்துள்ளார்.
ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி பில் பிளயருடன் நடாத்திய சந்திப்பில் நகரத்தில் அகதி கோரிக்கையாளர்களின் தங்குமிட அமைப்பு குறித்து எச்சரிக்கை எழுப்பியதை தொடரந்து தெரிவித்த கருத்தில் பிளயர் இவ்வாறு தெரிவித்தார். யூன் மாதம் ஒழுங்கற்ற முறையில் கனடா-யு.எஸ் எல்லையை கடக்கும் அகதி கோரிக்கையாளர்களிற்கான செலவின் ஒரு பகுதியாக 50மில்லியன் டொலர்களை உதவுவதாக – கியுபெக், ஒன்ராறியோ மற்றும் மனிரோபா மாகாணங்களிற்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
கியுபெக்கிற்கு மொத்தமாக 36மில்லியன் டொலர்கள், ஒன்ராறியோவிற்கு 11மில்லியன் டொலர்கள் மற்றும் மனிரோபாவிற்கு 3மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்ததாக குடிவரவு அமைச்சர் Ahmed Hussen தெரிவித்தார். கடந்த வாரம் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் மத்திய அரசாங்கத்திடமிருந்து 200மில்லியன் டொலர்களை கேட்டிருந்தது. ஒன்ராறியோ-மகாணத்தின் மற்றய பகுதிகள் ஒட்டாவா போன்றவை உட்பட.