Canada

பெண்ணின் தலைமுடியைப் பிடித்திழுத்து கடத்த முயற்சி!

யோர்க் பிராந்திய பொலிசார் அமைதியை குலைக்கத்தக்க கடத்தல் முயற்சி சம்பந்தப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில் தலை முடியை பிடித்து இழுத்தவண்ணம் கடத்த முயன்றதை வெளிப்படுத்தியுள்ளது. றிச்மன்ட் ஹில் பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 2.50-மணியளவில் ஹை ரெக் வீதி மற்றும் சில்வர் லின்டென் டிரைவ் பகுதியில் பெண் ஒருவர் வீடொன்றின் கதவை தட்டியுள்ளார்.

எவரும் கதவை திறக்கவில்லை. ஆனால் வீட்டின் கண்காணிப்பு கமரா தெரியாத, மனிதன் ஒருவன் கைத்துப்பாக்கி என கருதக்கூடிய ஆயுதம் ஒன்றுடன் வீதியில் தரிக்கப்பட்டு நின்ற வாகனத்தில் இருந்து வெளியேறுவது தெரிந்துள்ளது. வீட்டின் முன் தலைவாசலில் நின்ற பெண்ணை-பாதிக்கப் பட்டவர்- அணுகி அவருடன் தகராறு செய்து பின்னர் அவரின் தலை முடியை பிடித்து இழுத்தவாறு தனது வாகனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

“நான் சாகப்போகின்றேன் என நம்புகின்றேன்” என அப்பெண் கூறுவது கேட்டுள்ளது. வாகனம் சென்று விட்டது. குறிப்பிட்ட மனிதன் கட்டை முடி மற்றும் தொப்பியுடன் கூடிய மேல் சட்டை அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர். இப்பெண்ணை அல்லது மனிதனை தெரிந்தவர்கள் அல்லது சம்பவம் நடந்த பகுதியில் கண்காணிப்பு கமரா வைத்திருப்பவர்கள் 1-866-876-5423, ext.7241 என்ற இலக்கத்துடன் அல்லது 1-800-222-TIPS மூலம் குற்றத் தடுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top