பெர்லின் வனப்பகுதியில் மோசமான காட்டுத்தீ: கிராமவாசிகளுக்கு எச்சரிக்கை !

பெர்லின் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான தீயின் தாக்கதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீப்பிழம்புகள் அபாயகரமாக இருப்பதால் பெர்லினுக்கு அருகில் உள்ள இரண்டு கிராமங்களில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். Frohnsdorf, Klausdorf மற்றும் Tiefenbrunnen ஆகிய கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 300க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் தங்கள் முக்கியமான உடமைகள் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டு வீடுகளை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் சார்பில் அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளன. 540 கிராமவாசிகள் தங்கள் உறவினர்களின் இல்லத்தில் தங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். Frohnsdorf கிராமவாசிகள் மட்டும் தங்கள் கிராமத்திற் வெள்ளிக்கிழமை அன்று வரலாம் என்றும் ஏனைய கிராமவாசிகள் தங்கள் கிராமங்களுக்கு வரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.