News

போரில் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் – எம். சுவாமினாதன்

வடக்கு , கிழக்கில் வாழும் யுத்தத்தினால் பாதிக்க்பட்டு இடம் பெயர்ந்து மீள்குடியேறிய வறிய குடும்பங்களிற்கு மீன்பிடி வளம் மற்றும் உபகரணங்கள் புனர்வாழ்வழிப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமினாதன் முன்னிலையில் வழங்கப்படவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் செவ்வாய்கிழமை மீள்குடியேற்றம் , புனர்வாழ்வழிப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமினாதன் கைச்சாத்திடப்படவுள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த 3000 மீனவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்கு 336 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 50 வீதமான 168 மில்லியன் மீள்குடியேற்றம் மறுமலர்ச்சி உதவி நிறுவனத்தினுடாக இலவசமாகவும் மிகுதி 50 வீதமான 168 மில்லியனை புனர் வாழ்வு அதிகார சபையின் மென் கடன் வழங்கல் திட்டம் மூலம் ஒரு குடும்பததிற்கு 56000 ரூபாவும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான கருத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது அதன் மூலம் நாள் ஒன்றுக்கு 2000-4000 வரை வருமானம் பெறக்கூடியதாக இருப்பதுடன் கடன் மீள் கொடுப்பனவாக நாளொன்றுக்கு ரூபா 80 மட்டும் ஒவ்வொரு குடும்பத்தினாலும் செலுத்த வேண்டி இருக்கும் .

இக்கருத்திட்டம் 5 குடும்பங்களைக்கொண்ட சிறு குழுக்களாக அமைக்கப்படும் அதன் மூலம் 600 3000 மீனவக்குடும்பங்கள் பயன் பெறத்தக்கதாக திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top