News

மனித எலும்புகளை அகழும் பணி எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடைநிறுத்தம்.

மன்னார் ‘சதொச’ வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மனித எலும்புகளை அகழும் பணி எதிர்வரும் 20ஆம் திகதி வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வரை குறித்த அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

அதுவரை 52 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் 66 மனித எலும்புக்கூடுகள் அடையாளமிடப்படிருந்தன. அவற்றில் 56 மனித எலும்புக்கூடுகள் வெளியில் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சனி, ஞாயிறு மற்றும் அரச விடுமுறை தினங்களில் மாத்திரம் அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தன.

எனினும், நேற்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அகழ்வு பணிகள் எதற்காக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பில் காரணம் வெளியாகவில்லை. எனினும், அங்கு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top