News

மிசிசாகா பகுதியில் விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயம்!

மிசிசாகா பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Balboa Drive மற்றும் Lakeshore வீதி அருகே நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் 5 மணியளவில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் குறித்த பகுதிக்கு சென்ற மருத்துவக்குழு, இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

மேலும் காரில் சென்றவர் சிறு காயத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக பீல் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த விபத்துக்கான காரணங்கள் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகளை அப்பகுதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top