முதலமைச்சர் விக்கியுடன் உடன்படும் அமைச்சர் மனோ.

தமிழர் தாயகப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள யுத்த வெற்றியின் நினைவுச் சின்னங்கள் அகற்றப்பட வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசனும் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடக்கில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்படவேண்டும் என, வடமாகாண சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதியிடம் கோரியிருந்தார்.
இந்த கருத்து தென்னிலங்கையில் சி.விக்கு எதிராக கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விக்னேஸ்வரனின் கருத்தை வரவேற்பதாகவும் அவரது கருத்தில் தவறில்லை என்றும், அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜே.வி.பி கிளர்ச்சியை வெற்றி கொண்ட அரசாங்கம் தெற்கில் வெற்றிச் சின்னங்களை அமைக்காத நிலையில், வடக்கு கிழக்கில் மட்டும் வெற்றிச் சின்னங்களை அமைப்பது நியாயமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.