News

முல்லைத்தீவில் பற்றியெரிகிறது தீ! மீனவர்கள் ஆக்ரோசம்!! பெரும் பதற்றம்…

முல்லைத்தீவு, நாயாற்றுப் பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களின் பல வாடிகள், படகுகள், வலைகளுக்கு சற்றுமுன்னர் தீ வைக்கப்பட்டுள்ளது. அதனால் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் என்று மிகுந்த ஆக்ரோசம் அடைந்துள்ளனர் பிரதேச மீனவர்கள்.

திட்டமிட்டு இந்தச் செயல் செய்யபட்டுள்ளது என்று பிரதேச மீனவர்கள் கூறுகின்றனர். பெரும் பதற்ற நிலைமை தோன்றியுள்ளதால் அருகில் உள்ள பெரும்பான்மை இன மீனவர்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர்.

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடியை – சுருக்க வலைப் பயன்பாட்டைத் தடுக்க வேண்டும் என்று பிரதேச மீனவர்கள் வலியுறுத்தி வந்ததுடன், தொடர் போராட்டத்தையும் மேற்கொண்டிருந்தனர். நேற்று முல்லைத்தீவுக்கு வந்த அமைச்சர் விஜிதமுனி சொய்சா அது தொடர்பில் ஆராய்த்தார்.

பிரச்சினைகளை ஆராய்ந்த அமைச்சர் குழு ஒன்று அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்தக் குழுவின் அறிக்கை வரும்வரை சுருக்குவலைப் பயன்பாடு முற்றாகத் தடை செய்யப்படும் என்றும், முன்னர் வழங்கப்பட்ட அனுமதிளுக்கும் தடை விதிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இன்று இரவு தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், வலைகளுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் பெறுமதி பல லட்சங்கள் என்று தெரியவருகின்றது. இது திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளது என்று மீனவர்கள் கொதிப்படைந்துள்ளதுள்ளனர்.

பொலிஸாரும், படையினரும் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவருகின்றது. மேலதிக விவரங்கள் விரைவில்…

அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் உடன் உரிய அதிகாரிகளுடன் தொடர்புகொண்டதுன், சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்து அப்பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளார்.

மேலும், முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவிக்கப்பட்டதுடன், தீ அணைக்கப்பட்டு தளத்தில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top