மொட்டுக் கட்சியுடன் இணைய மாட்டோம்.

தனது கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட எவ்வித முடிவும் எடுக்கவில்லை என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சில ஊடகங்கள் செய்திகளைத் தெரிவித்திருந்தாலும் அச்செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியும், சில சிறு கட்சிகளும் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளதா என ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கே மேற்கண்ட பதிலை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.