யாழில் வாள்வெட்டுக் குழுவுக்கு ஆதரவாக களமிறங்கி ஏமாற்றம் அடைந்த கூட்டமைப்பின் பிரபலம்?

சாவகச்சேரியில் நேற்றுமுன் தினம் கைது செய்யப்பட்ட 7 இளைஞர்களையும் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று நேற்று உத்தரவிட்டது.
மானிப்பாய் பொலிஸார் 7 இளைஞர்களை நேற்றுமுன்தினம் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து 2 வாள்கள், ஒரு கோடாரி, ஒரு கைக் கோடாரி, செயின், இரும்புப் பைப், 3 உந்துருளிகளை மீட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்றுக் காலை தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டனர்.சட்டத்தரணியும், மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகியிருந்தார்.
விசாரணைகளின் பின்னர் இளைஞர்கள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டத்தரணி சயந்தன், அவர்களைப் பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
பிணைக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மாகாண சபை உறுப்பினருமான கே.சயந்தன் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களின் நெருங்கிய சகா என்பவர் குறிப்பிடத் தக்கது.