ரஷ்யாவின் Krasnoyarsk பகுதியில் பயணிகள் ஹெலிகொப்டர் ஒன்றும் சரக்கு ஹெலிகொப்டர் ஒன்றும் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு ஹெலிகொப்டர்களிலும் பயணம் செய்த 18 பேர் பலியான அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. எதனால் இந்த விபத்து ஏற்பட்டது என்பது குறித்து இதுவரையில் எந்த விவரமும் கிடைக்கவில்லை.
இரண்டு ஹெலிகொப்டர்களின் கருப்புப் பெட்டிகளும் மீட்கப்பட்டதால் விரைவில் விபத்து குறித்த விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தைப் பார்த்த ஒரு நபர் தீப்பற்றி எரியும் ஹெலிகொப்டரின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இறந்தவர்களில் மூவர் ஹெலிகொப்டர் நிறுவன ஊழியர்கள், மற்ற 15 பேரும் எண்ணெய் சுத்திகரிப்பு மையங்களில் வேலை செய்பவர்கள். விபத்து குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.