ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க மத்திய அரசு மறுப்பு!

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு கூறியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடுசெய்தது.
இந்த வழக்கில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது. முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது. இந்த முடிவு தமிழக அரசுக்கு தெரிவிக்கபட்டு விட்டதாக கூறப்பட்டுள்ளது.