ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு பரிதாபமான நிலையில் இளைஞன் ஒருவர் ..

ரொறன்ரோ செயின்ட் ஜேம்ஸ் நகரில் இன்று நடந்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது Wellesley மற்றும் Ontario தெருக்களுக்கு அருகே நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழு உடனடியாக குறித்த நபரை வைத்தியலையில் அனுமதித்தனர். மேலும் அவரது கழுத்து பகுதிக்குள் துப்பாக்கி சன்னம் காணப்படுவதாகவும், அவற்றை அப்புறப்படுத்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும், அவர் வைத்திருந்த துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கைது செய்யப்பட்ட இளைஞர் மீது எவ்வித குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.