ரொறன்ரோ தேவாலயத்திற்கு வெளியே ஏற்பட்ட தாக்குதலில் பெண் மற்றும் ஆண் ஒருவர் ஆபத்தான நிலையில்!!

ரொறன்ரோ தேவாலயத்திற்கு வெளியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 2 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். St. James Cathedral பகுதியில் நேற்று அதிகாலை 3:30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 17 வயது பெண் ஒருவரும், 22 வயது ஆண் ஒருவரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியால் சென்ற ஒருவர், இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இந்நிலையில் குறித்த பகுதிக்குச் சென்ற போது, அவர்கள் தலையில் காயமடைந்த நிலையில் இருந்ததாகவும், பின்னர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது அவர்களின் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என தெரிவித்த பொலிஸார், தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.