Canada

ரொறான்ரோ மக்கள் இனி கவலைப்பட வேண்டாம்!

ரொறன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அண்மைய நாட்களாக நிலவி வந்த ஆலங்கட்டி மழை மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழையுடனான காலநிலை நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் குறைந்தளவிலான மழை வீழ்ச்சியே காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

30 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியானது மிசிசாகுகா, பிராம்ப்டன், பிக்கரிங், ஓஷவா, தெற்கு டர்ஹாம் பிராந்தியம், வோகன், ரிச்மண்ட் ஹில் மற்றும் மார்க்கம் பகுதிகளில் பதிவாக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் சாதாரணமாக 27 C அளவில் காலநிலை காணப்படும் என்றும், கூடுதலாக 30 C வரை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இன்று 25 C அளவில் அல்லது கூடுதலாக 32 C இல், காலநிலை காணப்படும் எனவும் எதிர்வு அந்நிலையம் எதிர்வு கூறியுள்ளது.< மேலும் நாளை மீண்டும் இப்பகுதிகளில் மழையுடனான காலநிலை தொடர்வதற்கான 45% வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top