ரொறொன்ரோவில் ஒரே இரவில் கைவரிசையை காட்டிய திருட்டு கும்பல்: எச்சரிக்கையாக இருக்குமாறு மக்களிடம் கோரிக்கை!

ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் ஒரே இரவில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களை அடுத்து அப்பகுதி மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு ரொறொன்ரோ பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அந்தவகையில் (புதன்கிழமை) இரவு மட்டும் ரொறொன்ரோ, ஹால்டன் மற்றும் பீல் பிராந்தியங்களில் 15 திருட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
இவை அனைத்தும் எரிவாயு நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதில், ஒரு சம்பவத்தில் ஆயுதம் ஏந்திய மூவர் அடங்கிய கும்பல் கொள்ளையில் ஈடுபட்ட பின்னர் ஒருவரை இழுத்துச் சென்று பின்னர் கார்களில் ஏறி தப்பி ஓடிவிட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இருப்பினும் குறித்த சந்தேகநபர் தொடர்பான விபரங்களை வெளியிடாத ரொறொன்ரோ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.