ரொறொன்ரோவில் 84-வயது பெண் குத்திகொலை!

ரொறொன்ரோ-எற்றோபிக்கோவில் 84-வயதுடைய பெண் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். இரட்டை-குத்து சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மற்றொரு பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிப்லிங் அவெனியு மற்றும் டிக்சன் வீதி பகுதியில் அமைந்துள்ள பிளாசாவிற்கு அருகில் சனிக்கிழமை பிற்பகல் 6.30மணியளவில் சம்பவம் நடந்துள்ளதாக அறியப்படுகின்றது.
32வயதுடைய மற்றுமொரு பெண் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார். இவருக்கு பல குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரு சம்பவங்களும் 11நிமிடங்கள் வித்தியாசத்தில் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த பெண் 84வயதுடைய எலெனா மார்குச்சி ரொறொன்ரோவை சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.
ரொறொன்ரோவை சேர்ந்த 31-வயதுடைய மைக்கேல் கொலஸ்ரொஸ்ரி சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார். இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதென தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட இருவருக்குமிடையில் என்ன தொடர்பு என்பது தெரியவரவில்லை.