Canada

ரொறொன்ரோ நாடாளுமன்ற தெரு பகுதியில் வசித்துவந்த மக்கள் கவலை!

ரொறொன்ரோவில் நாடாளுமன்றத் தெருவில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தை அடுத்து, மீண்டும் தமது வீடுகளில் நுழைவதற்கு அம் மக்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். குறித்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் அக்கடிதத்தில் உட்கட்டமைப்புக்கள் சேதமடைந்துள்ள நிலையிலேயே குறித்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை பகல் 1 மணிக்கு குறித்த 20 மாடி கட்டிடத்தில் பாரிய தீ ஏற்பட்டது, இதனை அடுத்து அங்கு வசித்த சுமார் 1500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
இதன் பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குறித்த தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், அக்கட்டிடத்தில் பல சேதங்கள் காணப்படுவதாகவும் அதை சரிசெய்ய சில மாதங்கள் எடுக்கும் எனவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், உறவினர்கள் மற்றும் அயலவர்களில் வீடுகளில் தங்கி இருக்கும் அக் குடியிருப்பாளர்களிடம், தமது வீடுகளுக்கு சென்று பார்வையிட்டிருந்தனர். இந்நிலையில் அவர்களது வீடுகள் பெரும் சேதமடைந்துள்ள நிலையில் இருப்பதை கண்ட அவர்கள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top