Canada

ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேறுவதில் வாடகை குடியிருப்பாளர்கள் தீவிரம்!

கிட்டத்தட்ட 59சதவிகிதமான வாடகை குடியிருப்பாளர்கள் ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக உள்ளதாக புதிய கருத்து கணிப்பு ஒன்று தெரிவிக்கின்றது. அங்குஸ் றெயிட் நிறுவனத்தின் ஆன்லைன் கணிப்பு 831 ரொறொன்ரோ பெரும்பாக குடியிருப்பாளர்களிடம் எடுத்த கணிப்பில் மொத்தமாக பதிலளித்த 47சதவிகிதமானவர்கள் வீட்டு விலைகள் காரணமாக ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பதிலளித்தவர்களில் 18முதல் 34-வயதிற்குட்பட்ட 58சத விகிதமானவர்கள் மற்றும் 59சதவிகிதமான வாடகைக்கு விடுபவர்களும் கூட ரொறொன்ரோ பெரும்பாகத்தை விட்டு வெளியேறுவதில் தீவிரமாக உள்ளனர் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வீட்டு சந்தை பற்றாகுறையை மேம்படுத்த அரசாங்கம் வீட்டு சந்தையில் மேலதிகமாக ஈடுபட வேண்டும் என மூன்றில் இரண்டிற்கும் மேலான ரொறொன்ரோ பெரும்பாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையை பதிலளித்தவர்களில் 75சதவிகித ரொறொன்ரோ வாசிகள் ஏற்று கொண்டுள்ளனர். ரொறொன்ரோ நகரில் மேலதிக எளிய வாடகை குடியிருப்புக்கள் கட்டுப்பட வேண்டும் என ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top