லேக் ஒன்ராறியோவிற்குள் மூழ்கிய வாகனத்திற்குள் இருந்த மனித உடல் மீட்பு!

வியாழக்கிழமை இரவு லேக் ஒன்ராறியோவிற்குள் தலைகீழாக புரண்ட வாகனத்திற்குள் இருந்து மனிதன் ஒருவரின் உடலை சுழியோடுபவர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10மணியளவில் சிவப்பு நிற ரொயொட்டா யரிஸ் லேக் ஷோர் புளுவாட் கிழக்கு மற்றும் பாராளுமன்ற வீதிக்கு அருகாமையில் லேக் ஒன்ராறியோ தண்ணீருக்குள் மூழ்கியது.
வாகனம், பதிவான ஒரு எஃகு தடையை மீறி தண்ணீருக்குள் தலைகீழாக புரண்டுள்ளதென பொலிசாரின் ஆரம்ப விசாரனை கூறுகின்றது. அருகில் காணப்பட்ட படக்குழுவை சேர்ந்த மக்கள் பலர் தண்ணீருக்குள் பாய்ந்து வாகனத்திற்குள் அகப்பட்டு கொண்ட நபரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இருப்பினும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.
வியாழக்கிழமை இரவு ரொறொன்ரோ பொலிஸ் கடல் பிரிவு அங்கத்தவர்கள் நீருக்கடி கமரா உபயோகித்தும் தெரிவுநிலை சிக்கல்கள் காரணமாக பலனளிக்கவில்லை. வெள்ளிக்கிழமை காலை சூரிய உதயத்தின் பின்னர் பொலிஸ் சுழியோடிகள் தண்ணீருக்குள் நுழைந்து தேடி மிக விரைவாக உடலை கண்டு பிடித்துள்ளனர்.
பாரம் தூக்கி ஒன்று கொண்டு வரப்பட்டு காலை 9-மணிக்கு சிறிது பின்னர் வாகனம் வெளியே இழுத்து எடுக்கப்பட்டது. வாகனத்திற்குள் இருந்த மனித உடல் வெளியே எடுக்கப்பட்டது. வாகனத்திற்குள் வேறு யாராவதும் இருந்தனரா என்பது தெரியவரவில்லை. வாகனம் எவ்வாறு தண்ணீருக்குள் மூழ்கியதென்பது குறித்து பொலிசார் விசாரனை செய்கின்றனர்.