வானிலை மாற்றம் வடகிழக்கு ஒன்ராறியோவில் ஏற்பட்டுள்ள டசின் கணக்கான தீக்களை கிளறி எரிய செய்யலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. பரி சவுன்ட் 33 காட்டு தீ தற்போது வடகிழக்கு ஒன்ராறியோவில் 11185 ஹெக்டர்களை மறைத்துள்ளது. வெள்ளிக்கிழமையின் உயர் ஈரப்பதம் பணியாளர்கள் 45 தீவிர தீக்களை ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள உதவியதென மாகாணத்தின் இயற்கை வளங்கள் அமைச்சு தெரிவித்தது.
இருப்பினும் 21 வெள்ளிக்கிழமை மாலை வரை கட்டுப்பாட்டை இழந்து காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வானிலை முன்னறிவிப்பு, இன்று உலர் வெப்பநிலை மற்றும் தென்மேற்கு காற்றுடன் கலந்து திரும்புவதால் தீப்பிழம்புகளை விசிறலாம் என அமைச்சு தெரிவிக்கின்றது. இந்நிலை ஏற்படின் கனடா பூராகவும் இருந்து, யு.எஸ். மற்றும் மெக்சிக்கோ ஆகிய இடங்களில் இருந்து உதவிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரி சவுன்ட் 33, 111சதுர கிலோ மீற்றர்கள் வட பே 72, ஒரு அசுரமான 272 சதுர கிலோமீற்றர்களிற்கும் சிறு மேலாக உள்ளதென தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை இரண்டும் மிக கவலை தரக்கூடியனவாக உள்ளன. புகை தொடர்வதால் காற்றின் தரம் மற்றும் தெரிவு நிலை போன்றன பாதிக்கப்படலாம் என கனடா சுற்று சூழல் தெரிவித்துள்ளது.
சில பகுதிகளில் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதே சமயம் வடமேற்கு ஒன்ராறியோவில் மற்றுமொரு 101 தீக்களுடன் தியணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.