Canada

வாகனத்திற்குள் சுடப்பட்ட மனிதன்!

32-வயதுடைய மனிதனொருவர் ரொறொன்ரோவின் மேற்கு பகுதியில் புதன்கிழமை காலை சுடப்பட்டுள்ளார். ஜேன் மற்றம் வெஸ்ரென் வீதிக்கு அருகாமையில் காலை 10-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது. மனிதன் கார் ஒன்றிற்குள் சுடப்பட்டதாகவும் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த நேரத்தில் பயணி ஒருவர் வாகனத்திற்குள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் இருந்து கடைசியாக இளம் நீல நிற எஸ்யுவி வாகனம் ஒன்று வெஸ்ரென் வீதி மேற்கு நோக்கி சென்ற வாகனத்தை பொலிசார் தேடுகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top