ரொறொன்ரோ வடக்கு பகுதியில் இரண்டு வாகனங்கள் மோதியதில் இதயத்தை நிறுத்தும் தருணம் ஏற்பட்டுள்ளது.இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கார் காற்றில் மேலே பறந்துள்ளது. அதிகாலையில் இடம்பெற்ற விபத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நெடுஞ்சாலை 7ல் யங் வீதி மற்றும் றெட் மேப்பிள் வீதி றிச்மன்ட் ஹில் ஒன்ராறியோவிற்கும் இடையில் புதன்கிழமை விபத்து நடந்தது.
சிவப்பு நிற செடான் ஒன்று நாற்சந்தியில் இடது பக்கம் திரும்ப முயன்று கொண்டிருக்கையில் எதிர்பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்த வெள்ளை நிற கார் ஒன்று திரும்பும் வாகனத்தின் பயணி இருக்கை பக்கமாக மோதியுள்ளது. வெள்ளை கார் தடையில் மோதியதில் சிவப்பு கார் வந்த திசையில் சுழன்று காற்றில் மேலே பறந்து பாதசாரி லைற் கம்பம் ஒன்றுடன் மோதியுள்ளது. விபத்தினால் குறைந்தது மூவர் காயமடைந்துள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸ் தெரிவித்துள்ளது.