வீடொன்றிற்குள் உள்ளே மோதி கொல்லைப்புறத்தை சென்றடைந்த கார்!

பிரிட்டிஷ் கொலம்பியா-சரே என்ற இடத்தில் வீடொன்றில் இருந்தவர்கள் மற்றும் அயலவர்கள் வெள்ளிக்கிழமை இரவு வியத்தகு விழிப்பூட்டல் ஒன்றுடன் எழுந்தனர். வீடொன்றின் முன்புற வழியாக கார் ஒன்று மோதி வீட்டின் உள்ளே மிகுந்த வலிமையுடன் நுழைந்து வீட்டின் கொல்லைப்புறத்தில் போய் நின்றது.
வாகனம் நிறுத்தல் குறியில் நிற்காது வேகமாக சென்று தடை ஒன்றின் மேல் பாய்ந்து வீட்டின் தரை தளத்தினூடாக சென்று வீட்டிற்குள் இருந்த குளிரூட்டியை இழுத்து கொண்டு கொல்லை புறத்திற்கு சென்றுள்ளது.
வீடு லக்நவி குடும்பத்தினருக்கு சொந்தமானது. வாகனத்தின் பின்னால் விடப்பட்டிருந்த சிதைவுகளின் செல் தடம் வீட்டில் வெடித்தல் சம்பவம் நடந்திருக்கலாம் என அயலவர்களை கருத வைத்துள்ளது.
வீட்டில் எட்டு பேர்கள் வசித்தனர் எனவும் எவரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் புலன்விசாரனை முடிந்து கட்டிட பரிசோதகர்கள் வீட்டிற்குள் நுழையலாம் என உறுதியளித்த பின்னரே செல்ல முடியும். ஆண் வாகன சாரதி கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.