India

ஸ்டாலினின் முழுக் கட்டுப்பாட்டில் தி.மு.க? அழகிரி எடுத்துள்ள நடவடிக்கை

தான் தற்போது தி.மு.கவில் இல்லை. எனவே தி.மு.க குறித்து தன்னிடம் கேள்வியெழுப்ப வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன். தற்போது எதுவும் பேசும் சூழ்நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் தெரியவரும் எனவும் கூறியுள்ளார். தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அந்த கட்சியின் உள்விவகாரங்களில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கருணாநிதியின் மறைவுக்கு பின்னரும் கட்சியில் இருந்து அழகிரி ஓரம் கட்டப்பட்ட வருகின்றார். மேலும், தி.மு.க ஸ்டாலினின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.

இதனால் அழகிரி கடும் அதிருப்பதியில் இருக்கின்றார். இதனால், தமிழக அரசியல் ஒருவித பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஸ்டாலின் தரப்புக்கு தனது பலத்தை காட்டும் வகையில் அழகிரி சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார். எதிர்வரும் ஐந்தாம் திகதி சென்னை அண்ணாசாலை முதல் கருணாநிதி நினைவிடம் வரை பேரணி நடைபெறவுள்ளதாக அழகிரி அறிவித்துள்ளார்.

அத்துடன், அன்றைய தினம் தனது ஆதங்கத்தை வெளியிடுவேன் எனவும் அழகிரி கூறியுள்ளார். மேலும், ஆதரவாளர்களிடமும், கருணாநிதியின் உண்மை விசுவாசிகளிடமும் கலந்துபேசி முக்கிய முடிவு எடுக்கப்படும். கலைஞரின் உண்மையான விசுவாசிகள் என் பக்கம் இருக்கிறார்கள் என அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top