ஹவாய்க்கான அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடா அறிவுறுத்தல்!

ஹவாய்க்கான அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடா அறிவுறுத்தியுள்ளது. தரம் 4 சூறாவளி யு.எஸ்.மாநிலத்தை நோக்கி முன்னேறுகின்றதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கனடா உலகளாவிய விவகார பிரிவு புதன்கிழமை எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஹவாய் கவுன்ரி, மோயி கவுன்ரி- மோயி, லனாய், மொலொகாய், ககூலேவ், ஓஆகு மற்றும் கௌவாய் தீவுகள்-உட்பட்ட தவிர்க்குமாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை சூறாவளி ஹவாய்க்கு அண்மையாக கடந்து செல்லும் என எதிர் பார்க்கப்படுகின்றது. யு.எஸ்.தேசிய வானிலை சேவை பலத்த மழைவீழ்ச்சி மற்றும் வன்மையான காற்று மாநிலத்தில் ஏற்படுவதுடன் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. பயண எச்சரிக்கைகளும் விடப்பட்டுள்ளன. போக்குவரத்து, மின்சாரம், தண்ணீர் மற்றும் உணவு தொலைத்தொடர்பு மற்றும் அவசர சேவைகள் புயலின் போது தடைப்படலாம் எனவும் எச்சரிக்கை அறிவுறுத்துகின்றது.