Canada

18.6சதவிகிதமாக அதிகரித்துள்ள ரொறொன்ரோ பெரும்பாக வீடு விற்பனை!

ரொறொன்ரோ பெரும்பாகத்தின் குடியிருப்பு வீடு விற்பனை கடந்த வருடம்- இதே யூலை- மாதத்துடன் ஒப்பிடுகையில் 18.6-சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ரொறொன்ரோ றியல் எஸ்டேட் சபை தெரிவிக்கின்றது. இந்த மாதம் கைமாறப்பட்ட 6,961 வீடுகளின் சராசரி விற்பனை விலை ஒரு வருடாந்த அடிப்படையில் 4.8சதவிகிதம் அதிகரித்து டொலர்கள் 782,129 ஆக காணப் பட்டுள்ளதென கூறப்படுகின்றது.

ரொறொன்ரோவில் மட்டும் யூலை மாதம் இடம்பெற்ற 13,868 புதிய பட்டியல்களில்-4,511 ரொறொன்ரோவில் மட்டும் உட்பட- ரொறொன்ரோ பெரும்பாகம் பூரான மொத்த எண்ணிக்கை 1.8சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ரொறொன்ரோ றியல் எஸ்டேட் சபை அறிவித்துள்ளது. யூலை மாதம் ஒரு சராசரி விலை டொலர்கள் 824,336ல் 2,574-வீடுகள் நகரில் விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே சமயம் ரொறொன்ரோ பெரும்பாகத்தின் எஞ்சிய பகுதிகளில் 4,387 வீடுகள் சராசரி விலை 757,365 டொலர்களிற்கு விற்பனையாகி உள்ளன. ரொறொன்ரோவில் தனி வீடுகள் அதிக விலை மதிப்புள்ளவை. வீடொன்றின் விலை 1,350,700மில்லியன் டொலர்கள். தனி வீடொன்றின் சராசரி விலை ரொறொன்ரோ பெரும்பாகத்தின் மற்றய பகுதிகளில் 907,347டொலர்களாக காணப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களின் சாதகமான முடிவுகள் ஊக்கமூட்டுவதாக அமைகின்றதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top