Canada

Kitchener வெடி விபத்தில் இறந்த கனடா பெண் மரணத்தில் மர்மம்: கொலையா?

கனடாவில் வெடி விபத்தில் பெண் ஒருவர் இறந்த வழக்கில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.கனடாவின் Kitchener பகுதியில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 58 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததோடு அவர் இருந்த வீடும் தரை மட்டமானது.

சம்பவ இடத்தில் Edra Haan என்னும் அந்த பெண்ணின் உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது.அவரது கணவரான Udo Haan பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Waterloo பகுதி பொலிசார் அந்த வெடி விபத்து குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.Udo Haan குணமடைவதற்காக காத்திருப்பதாக தெரிவிக்கும் பொலிசார் அவரிடம் இந்த வெடி விபத்து தொடர்பாக விசாரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வெடி விபத்து காரணமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ள அக்கம் பக்கத்தவர்கள் வீடு திரும்பலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், விசாரணை இன்னும் தொடர் இருப்பதால், விபத்து நடந்த வீட்டை ஒட்டி இரு புறமும் இருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் தற்போதைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top