Canada

Presto அட்டை வைத்திருப் பவர்களிற்கு இரண்டு மணிநேர பரிமாற்ற கொள்கை!

>ஒரு சிறிது நேர செயற்பாட்டுக்கு இரண்டு கட்டணங்களை செலுத்தி ஓட வேண்டிய நிலை ரிரிசி கட்டணம் செலுத்துபவர்களிற்கு ஞாயிற்றுகிழமை முடிவிற்கு வருகின்றது. Presto அட்டை வைத்திருப்பவர்கள் ரிரிசியின் புதிய இரண்டு-மணித்தியால பரிமாற்ற கொள்கை மூலம் தங்கள் இடைவழி பயணத்தை இரண்டு மணித்தியாலங்களில் வரம்பற்ற முறையில் பெற்று கொள்ளலாம்.

முன்னர் பரிமாற்றத்தை ஒரு வழி தொடர்ச்சியான பயணத்திற்கு மட்டுமே உபயோகிக்க முடியும். திசையை மாற்றினால் அல்லது அவசர நிறுத்தம் மேற்கொண்டால் மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டி இருந்தது. ஞாயிற்றுகிழமையில் இருந்து வாடிக்கையாளர்கள் திசைகளை இரண்டு மணித்தியாலத்திற்குள் மாற்ற முடியும். Presto அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் அட்டையை ஒரு தடவை அமைப்பில் தட்டினால் பரிமாற்றம் அவர்களது அட்டையில் பதியப்படும்.

இரண்டு மணித்தியாலங்களிற்குட்பட்ட அடுத்தடுத்து வரும் தட்டுக்கள் உறுதி செய்யப்படும். இத்திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மக்கள் Presto அட்டையை பயன் படுத்த ஊக்குவித்தல் என்பதாகும். 2019 இறுதியில் டோக்கன்கள் நீக்கப்பட உள்ளன.

Latest News

To Top