News

அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட 2 சூட்கேஸ்கள்: நிர்வாணமாக இருந்த பெண்களின் சடலங்கள்!

ரஷ்யாவில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் பகுதியில் கிடந்த சூட்கேஸ்களில் இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவின் Lyublino மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஷாப்பிங் மால் அருகே கருப்பு நிறத்திலான சூட்கேஸ் ஒன்று கிடப்பதாக, சைக்கிள் ஒட்டி ஒருவர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சூட்கேஸை திறந்து பார்த்த பொழுது உள்ளே நிர்வாணமாக இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் சடலத்தை கைப்பற்றிய பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பெண்ணின் முதுகுப்பகுதியில் ஏதோ எழுதப்பட்டிருப்பதாகவும், ஆனால் அது என்ன என்பது தெளிவாக படிக்கமுடியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் கொலை செய்யப்பட்ட பெண் 18 முதல் 25 வயதுடையவராக இருக்கலாம். அவர் துஸ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல் செய்யப்பட்டதற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக Yuliya Ivanova தலைமையிலான விசாரணை கமிட்டி கூறுகையில், இந்த வார ஆரம்பத்தில் கூட இதேபோன்று ஒரு பெட்டியில் நிர்வாணமாக அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அடுத்தடுத்து இதுபோன்று நடைபெற்றுள்ள சம்பவங்களால் பொதுமக்கள் பெரிதும் அச்ச்சமடைந்துள்ளனர்.குற்றவாளி குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top