News

அமெரிக்காவில் டிரம்ப்பின் புதிய நிபந்தனை: இந்தியர்கள் பாதிக்கும் அபாயம்!

அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய நிபந்தனை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முந்தைய ஒபாமா அரசு,அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு அனுமதி அளித்தது.

இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அமெரிக்காவில் அரசு உதவி பெறுபவர்கள் அல்லது உதவி பெற காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு கிரீன்கார்டு வழங்க மறுத்து டிரம்ப் நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.

இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அங்கு வசிக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் பாதிப்படைவார்கள்.

இந்த விதிமுறையில் கடந்த 21ம் தேதி உள்நாட்டு பாதுகாப்பு துறை கையெழுத்திட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் உணவு மற்றும் பண உதவிகளை பெறுபவர்கள் கிரீன் கார்டு கேட்டு விண்ணப்பிக்க முடியாது என்ற புதிய நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைக்கு அங்கு வசிக்கும் தொழில்நுட்பத் துறையினர் பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என் கருதி அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Latest News

To Top