அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரி, கொழும்பில், காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதனால் குறித்த பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், நீர்த்தாரை வாகனங்களும் பாதுகாப்பு வேலிகளும் அமைக்கப்பட்டிருந்தன.





அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பௌத்த பிக்குகள் மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த பலரும் கலந்து கொண்டிருந்தனர்.