அவுஸ்திரேலியாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்!

தீவிரவாத குழுவுடன் தொடர்புடையதாக கருதப்படும் இலங்கை இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட திட்டமிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் University of New South Wales பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் Mohamed Kamer Nizamdeen(25) என்னும் அந்த நபர் நேற்று மதியம் 2 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தீவிரவாத தாக்குதல்கள் நடத்தும் திட்டங்களை உள்ளடக்கிய ஆவணங்கள் மற்றும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் நபர்களின் பெயர்கள் அடங்கிய நோட்டுப் புத்தகம் ஒன்று ஆகியவை கிடைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த ஆவணங்களின் அடிப்படையில் அவருக்கு ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக நம்புவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் அந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டெடுத்தபோது பொலிசாரிடம் ஒப்படைத்தார். உடனடியாக ஸர்ச் வாரண்ட் ஒன்றுடன் Nizamdeenஇன் வீட்டை பொலிசார் சோதனையிட்டபோது பல மின்னணுப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டுள்ள Nizamdeenக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பெரியவை மற்றும் முக்கியமானவை என்று உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது. Nizamdeen கைது செய்யப்பட்டுள்ளதால் நாட்டிற்கு வர இருந்த ஆபத்து நீங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.