அவுஸ்திரேலியாவில் கைதான இலங்கை இளைஞனின் ஆவணத்தில் சிக்கிய முக்கிய தகவல்கள்!

அவுஸ்திரேலியாவில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளார். மேற்கொண்ட தீவிர விசாரணையின் போது முக்கிய ஆவணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இதன்மூலம் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நேரடி தொடர்பு உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிசாம்டீனிடமிருந்து கைப்பற்றப்பட்ட நாட்குறிப்பில் பல அதிர்ச்சி தரும் விடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் மிக முக்கிய பிரமுகர்கள் மற்றும் முக்கிய தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியமை கண்டறியப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், முன்னாள் வெளிவிவகார அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும், சிட்னியின் முக்கிய இடங்களான ஓபரா ஹவுஸ், பொலிஸ் நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் பிரசித்திபெற்ற பல்கலைகழகத்தை சேர்ந்த இலங்கை பிரஜையான 25 வயதான கமர் நிசாம்டீன் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் அவர் தனித்து செயற்பட்டமை தெரியவந்துள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இலங்கை பிரஜைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கடுமையானவை. அவற்றை சாதாரணமாக கருத முடியாது எனவும் அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிசாம்டீனின் நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ள பயங்கரமான விடயங்களை நிறைவேற்றும் திறன் அவரிடம் உள்ளதா என ஆராய்வதற்காக உளவியலாளர்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.