ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு பெண் 30 பெண்களைக் கொன்று தின்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளாள்.
அவளது வீட்டில் ஊறுகாய் போடப்பட்ட உடல் பாகங்கள் அடங்கிய பாட்டில்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
ரஷ்யாவைச் சேர்ந்த Natalia Baksheeva (43) என்னும் பெண்ணும் அவளது கணவனும், Elena Vashrusheva (35) என்னும் பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டிடப்பணியாளர்கள் சிலர் சாலையோரம் கிடந்த ஒரு மொபைல் போனை எடுத்து பார்த்தபோது, அதில் ஒரு நபர் இறந்த பெண் ஒருவரின் உடல் பாகங்களுடன் எடுத்துக் கொண்ட படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
பொலிசார் அந்த மனிதனின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு மனித உடலின் பாகங்கள் ஃப்ரீஸரிலும், ஊறுகாய் போடப்பட்டு பாட்டில்களிலும் வைக்கப்படிருப்பதைக் கண்டனர்.
விசாரணையில் Natalia, தனது கணவனான Dmitry Baksheev (35) ஒரு பெண்ணுடன் சிரித்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆத்திரப்பட்டு அவளைக் கொல்லும்படி கூற, உறுதியான மன நலம் இல்லாத அவள் கணவனும் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொன்றுள்ளதும், அந்த பெண் Elena Vashrusheva என்னும் வெயிட்டர் என்பதும் தெரியவந்துள்ளது.

அவளது சில பாகங்களை சமைத்து உண்ட பிறகு மீதி பாகங்களை ஃப்ரீஸரில் வைத்துள்ளனர்.
மேலும் விசாரித்ததில் Natalia, ஏற்கனவே 30 பெண்களைக் கொன்று அவர்களது உடலைத் தின்றுள்ளது தெரிய வந்துள்ளது.
Nataliaவுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம். அவளது கணவனான Dmitryக்கு காச நோய் இருப்பதால் தற்போதைக்கு பொலிசார் அவனை விசாரிக்கவில்லை.

