இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக அங்கிருந்த கடலில் அலைகள் எழும்பு கிராமத்துக்குள்ளே வந்ததால், அங்கிருந்த மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர்.

இந்தோனேஷியாவின் Sulawesi பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக ஒருவர் பலியாகியிருப்பதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5-ஆக பதிவாகியுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இதனால் மத்திய மற்றும் மேற்கு Sulawesi பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடத்திற்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன் பின் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தின் போது கடலில் இருந்து அலைகள் சாதரணமாக கரையை நோக்கி எழும்பி வருவது போன்று இருந்தது. இதனால் அந்தக் காட்சியை அங்கிருக்கும் மக்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று மேலெழும்பிய ராட்சத அலையால், அங்கிருந்த மக்கள் உயிரைக் காப்பாற்றி கொள்ள ஓடினர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
மேலும் இதனால் அப்பகுதியில் உள்ள பல்வேறு வீடுகள் சேதமடைந்துள்ளன. தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால், தகவல்களைப் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
கடந்த 2004-ஆம் ஆண்டு இந்தோனேசியாவின் தெற்குப் பகுதியில் உள்ள சுமத்ரா தீவில் பயங்கரமான நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் இது 9.1 என்ற பதிவானது. இதில் பலர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
