Canada

எட்டோபிகோக் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு பெண் உட்பட மூவர் காயம்!!

எட்டோபிகோக் பகுதியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

எட்டோபிகோக் பகுதியில் உள்ள குடியிருப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 8:30 மணிக்கு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று துப்பாக்கியுடன், வந்த மர்ம நபர் ஒருவர் எட்டோபிகோக் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விவரம் அறிந்து குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 20 வயதுடைய ஆண் நபர் இருவரும், 30 வயதுடைய பெண் ஒருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் இது தொடர்பாக ரொறொன்ரோ பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top