Canada

ஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு!

ஒட்டாவாவைத் தாக்கிய சூறாவளியினால் ஏற்பட்டுள்ள அழிவுகளைச் சீர் செய்வதற்கான உதவிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம், கனேடிய தலைநகமான ஒட்டாவாவை தாக்கிய கடும் சூறாவளியின் காரணமாக 150,000க்கும் மேலானவர்கள் தங்களுடைய வீடுகளில் மின்சாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

மேலும்,நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, முகாம்களில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த சூறாவளியில் இருந்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டு வர தற்போது அப்பகுதி மக்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு, மனநல ஆலோசனை சேவைகள் மற்றும் வயது முதிந்தோர்களுக்கான சேவைகளை பெற்றுக் கொடுப்பதில் முக்கியத்தும் வழங்க தொண்டு நிறுவனங்களும், மத்திய அரசும் முன் வந்துள்ளது.

இந்த தகவலை சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புக்களை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ள பொது பாதுகாப்பு அமைச்சர் றால்ஃப் குட்டேல் தெரிவித்துள்ளார்.

இந்த அழிவுகளின் மிக மோசமான நிலையினைப் பார்த்து தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த தாக்கத்தில் இருந்து மீள்வதற்கு மாநகர நிர்வாகமும், மாநில அரசும் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசும் உதவிகளைச் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காகவும், பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த வரைபடத் தயாரிப்புகளுக்காகவும் மத்திய அரசின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் கனேடிய மத்திய பொலிஸ் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குட்டேல் தெரிவித்துள்ளார்.

மேலும், சூறாவளியின் தாக்கத்தினைத் தொடர்ந்து ஒட்டாவா பகுதிக்கு பாதுகாப்புகள் தீவிரம் அடைத்துள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top