ஒட்டாவா-Gatineau பகுதியை தாக்கியுள்ள பலத்த சூறாவளி .

ஒட்டாவா-Gatineau பகுதியை வெள்ளிக்கிழமை பலத்த சூறாவளி தாக்கியுள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட்டிடங்கள் சேதமடைந்ததுடன் கார்கள் தலைகீழாக புரட்டப்பட்டன.
30பேர்கள் வரை காயமடைந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.கூரைகள் பிய்க்கப்பட்டுள்ளன அத்துடன் வீதிகள் பூராகவும் குப்பபைகள் காணப்படுகின்றன.


சில பகுதிகளில் வீடுகள் முற்றாக சேதமடைந்ததுடன் சிறிய மோல்கள் உணவகங்கள் அழிக்கப்பட்டுள்ளன.


சூறாவளியின் மதிப்பீடுகள் EF-2காற்றுடன் கூடி மணித்தியாலத்திற்கு 200கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசியதாக அளவிடப்பட்டுள்ளது. சூறாவளி மிக மிக சிறியதாக இருந்த போதிலும் மக்களிற்கு பேரழிவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.


இத்தகைய சம்பவத்தை மக்கள் எதிர் பார்க்கவில்லை எனவும் அறியப்படுகின்றது.
பாடசாலை ஒன்று எரித்து தள்ளப்பட்டுள்ளது.
171,000 மக்கள் வரை மின்சாரத்தை இழந்துள்ளனர்.
பாடசாலைகள் சில மக்கள் தங்குவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப் பட்டவர்களிற்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எச்சரிக்கை தொடர்கின்றதென அறியப்படுகின்றது.