Business

ஒன்ராறியோவின் பெரும்பாகங்களில் எரிவாயு விலை குறைவடைந்து உள்ளது.

புதன்கிழமை பிற்பகல் ரொறொன்ரோ ஒட்டாவா மற்றும் ஹமில்ரன் போன்ற பாரிய நகரங்களில் எரிவாயு விலை லிட்டர் ஒன்றிற்கு டொலர்கள் 1.20ற்கும் கீNழு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மாகாணத்தின் தெற்கு பகுதிகளில் சராசரி விலை லிட்டர் ஒன்றிற்கு டொலர்கள் 1.23 மற்றும் டொலர்கள் 1.26 ஆக இருந்துள்ளதென அறியப்படுகின்றது.

தொலை தூர பகுதிகள் சிலவற்றில் டொலர்கள் 1.10ற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகின்றது.

வாடிக்கையாளர்களிற்கு இது முக்கியமாக ஒரு நல்ல செய்தியாக அமையும்.

ஒரு 13 நாட்கள் காலப்பகுதியில் ஒன்ராறியோவின் சராசரி எரிவாயுவின் விலை 13சதங்களால் குறைவடைந்துள்ளது.

ஒன்ராறியோவில் லிட்டரின் சராசரி விலையில் 10-சதங்களை வெட்டுவதாக மாகாண அரசாங்கம் கொடுத்த சத்தியத்தின் நிமித்தமே இந்த விலைக்குறைப்பு எனவும் கூறப்பட்டுள்ளது.

Latest News

To Top