ஒன்ராறியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினரான லியோனா அலெஸ்லேவ் லிபரல் கட்சியில் இருந்து எதிர்க்கட்சியான பழமைவாத கட்சியில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் அவர் தனது விலகலை அறிவித்திருந்ததுடன், எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டார். இதனை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் வரவேற்றிருந்தனர்.மேலும் அங்கு உரையாற்றிய அவர், “கனடியர்கள் என நாம் எதிர்கொள்ளும் அவசரகால பிரச்சினைகள் பற்றி எதிர்க்கட்சி தலைவர் மற்றும் அவரது குழுவினர் உறுதியுடன் உள்ளனர்.
அந்தவகையில் அவர்கள் அதற்காக எதிர்கொள்ளும் தீர்வு திட்டங்கள் பிடித்துள்ளது. எனவே எனது லிபரல் சகாக்களுக்கு, நன்றி, ஆனால் நான் ஏற்றுக்கொண்ட உறுதிமொழி நாட்டுக்காகவே அன்றி கட்சிக்காக இல்லை. மேலும் எனது தொகுதிகள் சேவை செய்ய வேண்டும் புனித கடமை உள்ளது எனவே அவை சார்பாக பணியாற்றுவேன்” என கூறியிருந்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு லிபரல் கட்சி சார்பாக அரோரா-ஓக் ரிட்ஜஸ்-ரிச்மண்ட் ஹில் தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட அவர் பழமைவாத கட்சி சார்பாக போட்டியிட்ட கோஸ்டாஸ் மெனிகாகஸை விட 1,093 வாக்குகள் வித்தியசத்தில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.