ஒரு வாரத்துக்குள் பேரறிவாளன் எனது கையில்: அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு, அரசு பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்து குற்றம் சாட்டப்பவர்களில் ஒருவரான பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கூறியதாவது, இன்று என் மகனை விடுதலைசெய்யும் உரிமையை உச்ச நீதிமன்றமே தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது.
நாளை நானும் எங்கள் வழக்கறிஞரும் முதல்வரை நேரில் சந்தித்து இது தொடர்பாகக் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். ஒரு வாரத்துக்குள் என் மகன் அறிவு என் கையில் இருப்பான் என்ற நம்பிக்கை உள்ளது. உலகில் உள்ள பலரும் எங்களுக்காகக் குரல் கொடுத்தனர். முகம் தெரியாதவர்கள்கூட என் மகன் விடுதலைக்கு ஆதரவு தெரிவித்தனர். அனைவருக்கும் மிக்க நன்றி என கூறியுள்ளார்.